நோர்வே ஈழத்தமிழர் அவைக்கான யாப்பு 1
இறுதி வரைவு (வெளிப்பாடு: 12, 29.10.2009 06:29 மாலை)
(ஆங்கில மூலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு ஒப்புநோக்கப்பட்டது)
நோர்வே ஈழத்தமிழர் அவை (நோ .ஈ.த.அ)

யாப்பு
1. அறிமுகம் :
நோர்வே ஈழத்தமிழர் அவை
ஈழத்து வம்சாவழியிலான நோர்வேத் தமிழர்களின் (நோர்வே ஈழத்தமிழர்) ஜனநாயக, வெகுசனப்
பங்கேற்புடன், அவர்களின் விவகாரங்களுக்காக நோர்வே நாட்டிலும் சர்வதேச அரங்கிலும்
செயலாற்றுகின்ற அதேவேளை தாயகத்திலுள்ள ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகக்
குரல்கொடுப்பதற்குமான ஆணை பெற்ற நோர்வே நாடுதழுவிய ஓர் அவையாக நோ.ஈ.த.அ.
அமைகிறது. இந்த அவையானது நோர்வே நாட்டின் சட்டம், விதிகள், ஒழுங்குமுறைகளுக்கு
அமைவாகச் செயலாற்றும்.

2. அடிப்படைக் குறிக்கோள்கள்
அ) புலம்பெயர்ந்து நோர்வேயில் வாழும் ஈழத்தமிழ் மக்கள்சார் விவகாரங்கள் :
இந்த அவையானது நோர்வேயில் ஈழத்தமிழரின் பண்பாட்டடையாளத்தையும், நலநிறைவையும்,
இந்நாட்டுடனான அவர்தம் நல்லிணக்கத்தையும், உள்நாட்டு அரசியல், சமூக, பொருளாதார,
பண்பாட்டு விவகாரங்களை மேம்படுத்தும்வகையில் செயற்படும். தமிழ் அடையாளம் (மொழியும்
பாரம்பரியமும்), பண்பாடு, கல்வி;, இன-நல்லிணக்கம், பொருளாதார மேம்பாடு போன்ற இன்னோரன்ன
விவகாரங்களின் பல்வேறுபட்ட அம்சங்களைக் கவனத்திலெடுத்து அவற்றின் நலன்களை முன் நிறுத்திக்
குரல்கொடுக்கும் செயற்பாடுகளில் இந்த அவை ஈடுபடும்.
ஆ) புலம்பெயர் ஈழத்தமிழ் மக்கள் சார் அனைத்துலக விவகாரங்கள்:
சர்வதேச மட்டத்தில் எதிர் கொள்ளப்படவேண்டிய ஈழத்தமிழர் விவகாரங்களை மற்றைய
நாடுகளிலுள்ள ஈழத்தமிழரோடு இந்த அவை ஒருங்கிணைத்துச் செயலாற்றும்.
இ) தாயகத்திலுள்ள ஈழத்தமிழர்களின் சுதந்திரம் , இறைமை,
மற்றும் மேம்பாட்டிற்காகப் பாடுபடல் :
1977ம் ஆண்டில் இலங்கைத் தீவில் இடம் பெற்ற பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கில் வழங்கப்பட்ட
மக்கள் ஆணையின் பிரகாரம் அத்தீவில் ஈழத்தமிழர்களுக்கு ஒரு பாரம்பரியமான தாயகம் உண்டு,
அவர்கள் ஒரு தனித்துவமான தேசியம், அத் தேசியத்திற்குச் சுயநிர்ணய உரிமை உண்டு என்ற
அடிப்படைகளினூடாக சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசை தொடரறாத வடக்குக்
கிழக்கில் அமைத்துக்கொள்வதே ஈழத்தமிழரால் மக்கள் ஆணையூடாக வெளிப்படுத்தப்பட்ட அரசியல்
அபிலாசை என்பதையும், இந்த மக்களாணையின் முக்கிய அடிப்படைகளை மீளவும் உறுதிப்படுத்தும்
வகையில் 2009 மே 10ம் திகதி நோர்வேயில் இடம் பெற்ற வாக்கெடுப்பில் 98.95 வீதமான
நோர்வேஜிய ஈழத்தமிழரால் வாக்களிக்கப்பட்ட நோர்வேஜிய தமிழ் ஆணை-2009 (நோ.த.ஆ-2009) இன்
மீளுறுதிப்படுத்தலின் அடிப்படையிலும் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு நிலப்பரப்பில் சுதந்திரமும்
இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசு உருவாக்கப்படவேண்டும் என்று இந்த அவை தெளிவாகக்
குரல் கொடுக்கும். சர்வதேச சமூகம் தமிழீழத்தை ஏற்றுக் கொண்டு அங்கீகரிப்பதற்கான வேலைகளில்
ஈடுபடுவதோடு ஈழத்தமிழர்கள் தமது இறைமையைச் சரணாகதி;யடையச்செய்யவேண்டும் என்ற
தோரணையிலான முயற்சிகளை எந்தக் கோணத்திலிருந்து யார் முன்னெடுப்பினும் அவற்றை
ஜனநாயகரீதியில் எதிர்கொண்டு ஈழத்தமிழரின் இறைமைக்காக இந்த அவை உறுதியாகச் செயற்படும்.
நோர்வே ஈழத்தமிழர் அவைக்கான யாப்பு 2
3) துணைக் குறிக்கோள்களும் வழிகாட்டல் கோட்பாடுகளும்
அ) நோர்வேஜிய சமுதாயத்தில் ஈழத்தமிழர்களின் இனநல்லிணக்கத்தைப் பலப்படுத்துதல்.
ஆ) கருத்து, மதம், பால், இனம், நிறம் போன்ற அம்சங்களின் அடிப்படையில் எழுகின்ற
அடக்குமுறைகள் எதுவும் இல்லாமல் நோர்வேயின் பொது விவகாரங்களில் பங்கேற்கும் தனிமனித
உரிமையைப் பலப்படுத்தல்.
இ) பல்லினப் பண்பாட்டு நோர்வேயில், தமிழ் அடையாளம், பண்பாடு, பாரம்பரியம் ஆகியவை
சுமுகமாக இயைந்துபோவதை ஊக்கப்படுத்தல்.
ஈ) நோர்வேயில் ஈழத்தமிழரிடையே கருத்தியல்ரீதியான கலந்துரையாடல்கள், விவாதங்கள் மற்றும்
ஐனநாயக ரீதியாக முடிவுகளை மேற்கொள்ளும் ஆற்றல் போன்றவற்றை ஊக்குவித்தல்.
உ) நோர்வேயிலுள்ள இதர ஈழத்தமிழ் அமைப்புக்களுடன் சுமுகமான கருத்தாடலைப் பேணுதல்.
ஊ) நோர்வே வாழ் ஈழத்தமிழரின் சமூக, அரசியல் அடையாளத்தைப் பேணவேண்டும் என்ற
கோட்பாட்டை முன்னிலைப்படுத்துகின்ற தளத்தில் நின்றவாறு இங்குள்ள அரசியற்கட்சிகளுடன்
தொடாச்சியான உறவுகளை வளர்த்துக்கொள்ளல்.
எ) இலங்கைத்தீவிற்கான பின்வரும் தமிழ்த் தேசியத் திட்டத்தை (த.தே.தி) அங்கீகரித்தல்: 1)
இலங்கைத் தீவில் ஈழத்தமிழர் தனித்துவமான ஒரு தேசியம் என்பது, 2) தனித்துவமான தேசியம் என்ற
அடிப்படையில் ஈழத்தமிழர் முழுமையான சுயநிர்ணய உரிமை கொண்டவர்கள் என்பது, 3) அத்தீவின்
தொடரறாத வடக்கு கிழக்கில் அமைந்துள்ள அவர்களின் பாரம்பரிய தாயகத்திற்கான உரிமத்தை
ஈழத்தமிழர்கள் தம்மகத்தே கொண்டுள்ளனர் என்பது, 4 ) தமிழ்த் தேசியம் தனது இறைமையை
ஸ்ரீலங்காவின் ஒற்றையாட்சி அரசிடம் ஒருபோதும் கையளிக்கவில்லை, அத்துடன் 1976ம் ஆண்டு
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படைகளுக்கு 1977ம் ஆண்டு இடம் பெற்ற பொதுத் தேர்தலில்
ஈழத்தமிழரால் ஐனநாயக ரீதியாக அளிக்கப்பட்ட மக்களாணையின் அடிப்படையில் இறைமையும்
சுதந்திரமுமுள்ள தேச-அரசில் அவர்களது இறைமை மீளநிலைநிறுத்தப்படவேண்டும் என்பதான
கொள்கைக் கருத்துநிலை. எனினும், மேற்கூறிய நான்கு உபபிரிவுகளில் கூறப்பட்ட எதுவும்
ஈழத்தமிழர்கள் தமது முழுமையான சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்தி எதிர்காலத்தில்
மேற்கொள்ளும் எந்தவொரு தீர்மானத்தினையும் புறக்கணிப்பதாக அமைந்துநிற்காது.
ஏ) தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் போராளிகளும் பொது மக்களும் செய்த
அளப்பரிய அர்ப்பணிப்புகளுக்கு மதிப்பளித்துச் செயற்படல்.
ஐ) தமிழீழ நடைமுறை அரசு சாதித்துள்ள ஆக்கப+ர்வமான அரசியல் நீதி, சமூக, பண்பாட்டு
விழுமியங்களை அங்கீகரித்துச் செயற்படல்.
ஒ) 1) சமயசார்பற்ற தன்மை, 2) தாராள ஐனநாயக பண்புடைமை, 3) வெகுசனப் பஙகேற்ப+டான
அரசியல், 4) ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தன்மை, 5) முறையான சட்டவாட்சியை நிலைநிறுத்தல், 5)
பரந்த ஐனநாயகப் பண்புகளைக் கொண்டிருத்தல், 6) ஏனைய நாடுகளில் மக்கள் அனுபவிக்கும்
அனைத்து உரிமைகளுக்கும் உத்தரவாதம் அளித்தல் ஆகிய தன்மைகள் பொருந்திய தமிழீழத்தை
உருவாக்குவதற்காக ஈழத்தமிழ்த் தேசியம் பாடுபடவேண்டும் என்பதை அங்கீகரித்துச் செயற்படல்.
ஓ) இந்த அவையானது ஈழத்தமிழ் தேசிய, இறைமைச் சின்னங்களை ஏற்று ஊக்குவித்தல் வேண்டும்.
ஒள) தமிழர் தாயகத்தில் சாதி வேறுபாடற்ற, சமயவாதமற்ற சமூகத்திற்கான உரிமைகளுக்காக குரல்
கொடுப்பதுடன், சமூக அரசியல் உரிமைகளுக்கான அனைத்துலக சாசனம், பொருண்மிய பண்பாட்டு
உரிமைகளுக்கான அனைத்துலக சாசனம், மற்றும் ஏனைய சர்வதேச சட்ட விதிகளுக்கு அமைவாக
தொடரறாத வடக்கு கிழக்கு பாரம்பரிய தமிழர் தாயகத்திலும், தீவின் ஏனைய பகுதிகளிலும்
உலகளாவிய மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களை மேம்படுத்தல்.
நோர்வே ஈழத்தமிழர் அவைக்கான யாப்பு 3
ஃ) ஸ்ரீலங்காவில் பிறப்பிக்கப்பட்டுள்ள மனிதவிரோத சட்டங்களை ஆதரிக்கின்ற அல்லது தமிழர்களை
இராணுவத்தின் மூலம் அடக்குமுறைக்குள்ளாக்குவதை ஆதரிக்கின்ற குழுக்கள் கட்சிகள்
போன்றவற்றிலிருந்து விலகிநிற்றல்.
க் ) தமிழீழத்தை அமைப்பதற்கான சகலவிதமான ஐனநாயக, வன்முறையற்ற வழிமுறைகளையும்
கையாளுதல்.
ங் ) மேற்குறித்த நோக்குகளுக்கும் கோட்பாடுகளுக்கும் ஏதுவாக நோ.ஈ.த.அ தனக்குத் தேவையான
வளங்களை இணைத்து வினைத்திறனோடு செயலாற்றும் முறையில் செயலகம் ஒன்றினை நிறுவிச்
செயற்படவேண்டும்.
4) பொது அவை
அ) பொது அவையானது இரண்டு அவைகளைக் கொண்டிருக்கும்: நோர்வே ஈழத்தமிழ்
மக்களவை (மக்களவை) மற்றும் நோர்வே தமிழீழ அமைப்புக்களின் தெரிவவை (தெரிவவை)
ஆ) உருவாக்கப்படும் முதலாவது பொது அவையானது மேற்கூறிய இரண்டு அவைகளுக்கும் நிர்வாகக்
குழுவிற்குமுரிய நடைமுறை விதிகளை உருவாக்கவேண்டும்.
இ) மக்களவைக்கான தேர்தலை நடாத்தும் பொறுப்பு, நோ.த.ஆ-2009 வாக்குக்கணிப்பிற்கான
தேர்தலை (வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான வாக்குக்கணிப்பு: 10 மே, 2009) நடாத்திய குழு
போன்றதொரு சுயாதீனமானதொரு தேர்தல் ஆணையத்திடம் கையளித்து நடாத்தவேண்டும்.
ஈ) ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர் ஒருவர் எழுத்து மூலமான முன் அறிவித்தலூடாக
ஈழத்தமிழர் அவையில் தனது செயற்பாட்டை நிறுத்தவேண்டிய நிலை ஏற்படுமிடத்து அவருக்குப்
பதிலாக புதிய அங்கத்தவர் ஒருவரை அவர் ஏற்கனவே பங்குபெற்ற தேர்தலில் கிடைத்த வாக்குகளின்
அடிப்படையில் தெரிவு செய்வதற்கு ஏதுவாக தேர்தல் ஆணையமானது வேட்பாளர்கள் பெற்ற
வாக்குகளை ஆவணப்படுத்தல் வேண்டும்.
உ) தாயகத்திலுள்ள ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பான விடயங்களில் நோர்வே
ரீதியிலும் உலகளாவிய மட்டத்திலும் மேற்கொள்ளப்படும் விடயங்கள் தொடர்பாக மக்களவையும்
தெரிவவையும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும், பிரிவு (2) அடிப்படைக் குறிக்கோள்களின் உபபிரிவு
(ஆ) மற்றும் (இ) தொடர்புபட்ட தீர்மானம் எதையும் இரண்டு அவைகளும் தனித்தனியான
பெரும்பான்மையுடன் மேற்கொள்ளும் பட்சத்திலேயே அத்தீர்மானம் ஈழத்தமிழர் அவையின்
தீர்மானமாகச் செல்லுபடியாகும். ஒரு தீர்மானம் தொடர்பாக இரண்டு அவைகளும் உடன்படாத நிலை
தோன்றுமிடத்து, அடுத்தடுத்தாக இரண்டு தடவைகள் விவாதித்து ஒவ்வொரு முறையும்
மேற்கொள்ளப்படும் வாக்கெடுப்பில் இரண்டு அவைகளும் தொடர்ந்து உடன்பாடு காண முடியாத
நிலை ஏற்படின் இரண்டு அவைகளின் உறுப்பினர்கள் அனைவரும் ஓர் அலகாகக் கூடி 2ஃ3
பெரும்பான்மை (13 வாக்குகள்) ஆதரவுடனேயே நிறைவேற்றலாம்.
ஊ) பிரிவு (2) அடிப்படைக் குறிக்கோள்கள் உபபிரிவு (1) தொடர்பான விடயங்களில் தெரிவவையின்
பங்கு பற்றுதல் இன்றி மக்களவை தானாகவே தீர்மானங்களை மேற்கொள்ளும்.
எ) இரண்டு அவைகளும் தனித்தனியே அமர்வுகளை நடாத்தும். எனினும் இரண்டு அவைகளும்
வருடத்தில் குறைந்தது இரு தடவையாவது (அரையிறுதி ஆண்டிலும், ஆண்டின் இறுதியிலும்) முழு
அவையினதும் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு செய்வதற்கும் முன்வைக்கப்பட்ட பிரேரணைகள்
பற்றி விவாதிப்பதற்குமாக இணைந்த அமர்வுகளை நடத்தவேண்டும்.
ஏ) பொது அவைக்கான தலைவர் மற்றும் உபதலைவரை ஒவ்வொரு வருடமும் தெரிவு செய்தல்
வேண்டும், தலைவர் நோர்வேயின் கிழக்கு (பெரும்பான்மை) பிராந்தியத்தில் இருந்து தெரிவு
செய்யப்பட்டால் உப தலைவர் ஏனைய பிராந்தியங்களில் ஒன்றிலிருந்து தெரிவு செய்யப்படல்
வேண்டும், மாறாக உபதலைவர் நோர்வேயின் கிழக்குப் பிராந்தியத்தில் இருந்து தெரிவு
நோர்வே ஈழத்தமிழர் அவைக்கான யாப்பு 4
செய்யப்பட்டால் தலைவர் ஏனைய பிராந்தியங்களில் ஒரு பிராந்தியத்தில் இருந்து தெரிவு செய்யப்படல்
வேண்டும்.
ஐ) மக்களவையும் தெரிவவையும் குறிப்பிட்ட ஒவ்வோர் அவையையும் தலைமை தாங்குவதற்குரிய
பிரதிநிதியை தனக்குள்ளிருந்தே தேர்ந்தெடுத்துக்கொள்ளும்.
ஒ) அனைத்துலக மட்டங்களில் நோர்வே ஈழத்தமிழர் அவையை ஒவ்வோர் அவையினாலும் தெரிவு
செய்யப்பட்ட ஒவ்வொரு பிரதிநிதி அல்லது இரண்டு அவைகளினாலும் பொதுவான உடன்பாட்டோடு
தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து பிரதிநிதித்துவம் செய்வர்.
ஓ) சகல அரசியல் கட்சிகளுடனும் தொடர்புகளைப் பலப்படுத்தும் வகையில் உள்நாட்டு
விவகாரங்களில் அரசியல் பக்கச்சார்பின்மை பேணப்படல் வேண்டும், ஏதேனும் அரசியல் கட்சி ஒன்றில்
பதவி நிலை வகிக்கும் ஒருவர் அல்லது கட்சி ஒன்றின் சார்பில் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்ற
உறுப்பினராகவோ அல்லது உள்ளுராட்சி சபை உறுப்பினராகவோ பதவி வகிக்கும் ஒருவர் நோர்வே
ஈழத்தமிழர் அவை சார்பாகவோ அல்லது அதன் மக்களவை மற்றும் தெரிவவை என்பவற்றின்
சார்பாகவோ வெளிநோக்கிய உத்தியோக பூர்வமான பதவிகளை வகிக்க முடியாது, ஆனால்
நோ.ஈ.த.அ வில் தேர்தலில் பங்குபற்றி அதன் அவைகளினுள் தீர்மானங்களை மேற்கொள்ளும் மக்கள்
பிரதிநிதிகளாக இருக்கலாம்.
ஒள) நோர்வோ ஈழத்தமிழர் மக்களவை
1. பிரதிநிதிகளின் எண்ணிக்கை: 15 பிரதிநிதிகள், இவர்களில் 10 பிரதிநிதிகள் பிராந்திய
ரீதியாகவும், 5 பிரதிநிதிகள் தேசிய ரீதியாகவும் தெரிவு செய்யப்படல் வேண்டும்.
2. வேட்பாளர்கள் : - ஒரு நபர் எந்தவொரு நாட்டில் பிறந்தவராயிருப்பினும் நோர்வேயில்
வதிவதற்கான சட்டபூர்வமான உரிமை கொண்டவராகவும் 18 வயதினை பூர்த்தி செய்தவராகவும்
இருப்பின் முதலாவது தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியுடைய வேட்பாளராவார். வேட்பாளர்
ஒருவர் இந்த யாப்பில் கூறப்பட்டுள்ள ஈழத்தமிழ்த் தேசிய இலக்குக் கோட்பாட்டினை ஏற்றுக் கொண்டு
நோ.ஈ.த.அ வின் அங்கத்தவராக இணைதல் வேண்டும். 2009 ஆண்டின் தேர்தல் தவிர அடுத்துவரும்
தேர்தல்களில் பங்குபற்ற விரும்பும் வேட்பாளர் ஒருவர் நோ.ஈ.த.அ வின் அங்கத்தவராக இரண்டு (2)
வருடங்களைப் பூர்த்தி செய்திருக்கவேண்டும். வேட்பாளர் ஒருவர் ஒரே நேரத்தில் பிராந்திய ரீதியிலும்
தேசிய மட்டத்திலும் போட்டியிட முடியாது.

3. பதவிக்காலம் : 4 ஆண்டுகள்

4. வாக்களிக்கத் தகுதியுடையோர் : நோர்வேயில் வதியும் ஈழத்தமிழர்கள்.
5. ஈழத்தமிழர்கள் என்பதற்கான வரைவிலக்கணம் : வாக்களிக்கத் தகுதியுடையவர்கள்
நோர்வேயில் வதியும் ஈழத்தமிழராகவும், 16 வயதிற்கு மேற்பட்டவராகவும் அல்லது தேர்தல்
நடைபெறும் ஆண்டில் 16 வயதினை பூர்த்தி செய்பவராகவும் இருத்தல் வேண்டும் அத்தோடு பின்வரும்
தகைமைகளில் ஒன்றினையாவது கொண்டிருத்தல் வேண்டும்: 1) இலங்கைத்தீவைப் பிறப்பிடமாக
கொண்டிருப்பதுடன் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டிருத்தல். 2) வாழ்க்கைத் துணை
இலங்கைத்தீவில் பிறந்திருத்தல் அத்துடன் அவர் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிருத்தல். 3)
மேற் கூறிய 1), 2) வகையினரின் வம்சாவழியினர் (வழித் தோன்றல்கள்).

6. வாக்காளர்களின் தகைமையை நிரூபித்தல் : இலங்கையில் பிறந்ததை நிரூபிக்கும் பிறப்புச்
சான்றிதழ் அல்லது பிற செல்லுபடியாகக்கூடிய ஆவணங்கள் (உ.ம்:- கடவுச்சீட்டு) வாக்களிப்பு
வேளையில் சமர்ப்பிக்க வேண்டும். நோர்வேயில் பிறந்தவர்கள் தங்கள் பெற்றோர்கள் பிறந்த நாட்டினை
உறுதிப்படுத்தும் ஆவணங்களை தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேற்படி
ஆவணங்களை தேர்தல் கண்காணிப்பாளர் ஒருவருக்கு தமிழ் மொழி அறிவுள்ள உதவியாளர் ஃ
மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் நிரூபித்தல்.
நோர்வே ஈழத்தமிழர் அவைக்கான யாப்பு 5

7) பிராந்தியப்பட்டியல் :
நோர்வே ஈழத்தமிழர் அவையினை அமைக்கும் நோக்கங்களுக்காக ஈழத்தமிழ் மக்களின் குடித்தொகை
பரம்பலின் பிரகாரம் நோர்வே ஐந்து பாகங்களாக வகுக்கப்படுகின்றது. 1) கிழக்கு (எட்டு மாவட்டங்கள்
ழுளடழஇ யுமநசளாரளஇ ர்நனஅயசமஇ ழுppடயனெஇ வுநடநஅயசமஇ Øளவகழடனஇ ஏநளவகழடனஇ டீரளமநசரன) 2) மேற்கு (இரண்டு
மாவட்டங்கள் - ர்ழசனயடயனெஇ ளுழபn ழப குதழசனயநெ), 3) மத்தி (மூன்று மாவட்டங்கள் - ஆøசந ழப
சுழஅளனயடஇ ழேசன-வுசøனெநடயபஇ ளுøச-வுசழனெநடயப), 4) தெற்கு மற்றும் தென்மேற்கு (மூன்று மாவட்டங்கள் -
ஏநளவ-யுபனநசஇ யுரளவ-யுபனநசஇ சுழபயடயனெ) 5) வடக்கு (மூன்று மாவட்டங்கள்: ழேசனடயனெஇ வுசழஅளஇ குinnஅயசம்)
சராசரி ஆயிரம் வாக்குகாளர்களுக்கு ஒரு பிரதிநிதி தெரிவு செய்யப்படுவார்.

8) பிராந்திய அவைகள் :
ஒவ்வொரு பிராந்தியங்களும் தமக்கென ஓர் அவையைக் கொண்டிருத்தல் வேண்டும். வேட்பாளர்களின்
தொகையைப் பொறுத்து 3, 5, 7 அல்லது 9 உறுப்பினர்கள் தேர்தலில் தெரிவு செய்யப்படுவர்.

9) பொது அவையானது பிராந்திய அவைகளுக்கான அதிகாரங்களை வரையறுப்பதுடன், நடைமுறை
விதிகளையும் வரையறை செய்யும். வெகுசன அடித்தளத்தில் ஐனநாயக ரீதியான பங்கேற்பு மற்றும்
பிராந்திய மட்டத்தில் கருத்தாடலைப் பேணுதல், தீர்மானங்களை ஆராய்ந்து மேற்கொள்வது ஆகிய
செயற்பாடுகளை ஊக்குவித்தலே பிராந்திய அவைகளின் நோக்காக அமையவேண்டும்.

1 0) தேசியப்பட்டியல் : 5 அங்கத்தவர்கள் (பிராந்திய ரீதியாக தெரிவு செய்யப்பட்ட
உறுப்பினர்களது எண்ணிக்கையின் அரைவாசி) தேசிய ரீதியிலும் தெரிவு செய்யப்படல் வேண்டும்.
அவை கீழ்க்காணும் நோக்கங்களை ஊக்குவிப்பதற்கானதாய் அமையும்: 1) தமிழர் விவகாரங்களைக்
கையாளுவதில் நோர்வே நாடளாவிய ரீதியிலான பார்வையைப் பேணல், 2) நோர்வே தழுவிய ரீதியில்
வெகுசனப் பங்களிப்பு, 3) வேட்பாளர்கள் எந்தப் பிராந்தியத்தினை சேர்ந்தவர் என்ற வேறுபாடற்ற
வகையிலும் திறமையின் அடிப்படையிலும் பங்குபற்றல், 4) பிராந்தியங்களை தாண்டிய வகையிலான
ஈடுபாடும் புரிந்துணர்வும்

1 1) சராசரியாக 10 வேட்பாளர்களாவது தேசிய மட்டத்தில் தேர்தலில் போட்டியிட ஊக்குவிக்கப்படல்
வேண்டும்.

1 2) மக்கட்தொகை பரம்பல் மாதிரி: - ஒவ்வொரு பிராந்தியங்களிலும் முன்மொழியப்படும்
வேட்பாளர்களின் எண்ணிக்கை மற்றும் பிராந்திய சபைகளுக்காக தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள்
எண்ணிக்கை, மற்றும் பிராந்திய சபைகளை அமைப்பதற்கு தேவைப்படும் மேலதிக உறுப்பினர்களின்
எண்ணிக்கை என்பன நோர்வேயில் உள்ள தமிழ் மக்கள் தொகை பரம்பலிற்கு ஏற்பவும் முன்வரும்
வேட்பாளர்களின் தொகைக்கேற்பவும் தேர்தல் குழுவினால் தீர்மானிக்கப்படும் இதற்கான முன்மாதிரி
ஒன்று எஸ்.எஸ்.பி என்னும் அமைப்பிடம் இருந்து 2009ல் பெறப்பட்ட வாக்காளர்கள்
தரவுப்பட்டியலின்படி 18 வயது மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களது விபரங்கள் இணைப்பு 1ல்
தரப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் தமிழ் மக்களின் பரம்பலில் கணிசமான மாற்றங்களேற்படுமிடத்து இம்
முறைமையானது மீளாய்வு செய்யப்பட வேண்டும்.
எ) நோர்வேயில் இயங்கும் தமிழீழ அமைப்புக்களின் தெரிவவை (தெரிவவை)
1. பிரதிநிதிகளின் எண்ணிக்கை: - நோர்வே நாட்டிலிருந்தவாறு தமிழீழத்தனியரசு என்ற
குறிக்கோளுக்காகப் பணியாற்றும் ஈழத்தமிழர் அமைப்புக்கள் 5 பிரதிநிதிகளை தேர்தல் மூலம்
தெரிவுசெய்யும்.
2. பதவிக்காலம் : - 4 ஆண்டுகள்
3. வேட்பாளர்கள் : - நோர்வேயில் சட்டரீதியான வதிவுரிமையுடன் வசிக்கின்றவரும் தேர்தல்
வருடத்தில் 18 வயதைப் ப+ர்த்திசெய்கின்றவருமான எந்தவொரு ஈழத்தமிழரும் வேட்பாளராகலாம்.
குறித்த வேட்பாளர் நோ.ஈ.த.அ வுக்கான யாப்பில் ஈழத்தமிழ்த் தேசியத்தின் இலக்கை வரையறுக்கின்ற
அடிப்படைகளையும் அதற்காக அர்ப்பணிப்போடு கடமையாற்றத் தயாராக இருப்பதையும்
நோர்வே ஈழத்தமிழர் அவைக்கான யாப்பு 6
ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும். தகுதிகாணும் அமைப்புக்கள் பகிரங்கமாக வெளியிடப்பட்டிருக்கும்
பட்டியலில் உள்ள வேட்பாளர்களில் 5 பேருக்கு வாக்களிக்கலாம். ஒவ்வோர் அமைப்பும்
வாக்களிப்பதற்காக ஒரு நபரை (நிறுவனத்தின் தலைவர்) அனுப்பிவைக்க வேண்டும். தகுதிபெறும்
அமைப்புக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தகைமைசார் குழுவானது மேற்படி வேட்பாளர்களின்
பட்டியலை வெளியிடுவதுடன் இரகசிய வாக்கெடுப்பையும் நடாத்த வேண்டும்.
4. வாக்களிக்கத் தகுதியான அமைப்புக்களுக்கான தகைமை அடிப்படைகள் : பின்வரும்
தகைமையைக் கொண்ட அமைப்புக்கள் வாக்களிக்கத் தகுதி கொண்டவையாகும்: 1) குறித்த
அமைப்பு தனது யாப்பில் நோ.த.ஆ-2009 இன் மக்களாணையை (சுதந்திரமும் இறைமையுமுள்ள
தமிழீழத் தனியரசுக்கான நோர்வே வாழ் ஈழத்தமிழரின் ஆணை) 2010ம் ஆண்டின் இறுதிக்குள்
இணைத்துக்கொள்வதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தவேண்டும். 2) குறித்த அமைப்பு தான்
இலக்காக கொண்டுள்ள மக்களின் 30 வீதத்தினரையாவது முனைப்புடன் செயற்படும்
அங்கத்தவர்களாக கொண்டிருத்தல் வேண்டும்.
5. இந்த தகைமைகள் பங்குபற்றும் எந்தவொரு அமைப்பின் யாப்பின் ஏதேனும் ஒரு சரத்து நோ.ஈ.த.அ
இன் அடிப்படைக் குறிக்கோள்களை மறுதலிப்பதாக இருக்கக் கூடாது என்பதற்காக
முன்வைக்கப்பட்டுள்ளது.
0 5) அங்கத்துவம் : -
அ) நோர்வே ஈழத்தமிழர் அவையின் பிராந்திய ரீதியான சபைகள் அங்கத்தவர்களை இணைத்தல்
வேண்டும். நிறைவேற்றுக் குழுவானது வருடாந்த அங்கத்துவ கட்டணத்தை தீர்மானிக்க வேண்டும்.
யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள அடிப்படை கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு அங்கத்துவ
பணத்தினையும் செலுத்திய ஒருவர் அவையின் அங்கத்தவராவார். முதலாவது காலப்பகுதிக்கு
ஆண்டுச் சந்தாப்பணம் 100 நோர்வே குறோணர்களாக இருத்தல் வேண்டும். 2009 ஆண்டு தேர்தல்
தவிர்ந்த ஏனைய தேர்தல்களின் போது வேட்பாளர்களாக நியமிக்கப்படுவதற்கு ஆகக் குறைந்தது 2
ஆண்டுகளுக்காவது அவையின் அங்கத்தவராக ஒருவர் இருந்திருத்தல் வேண்டும். யாப்பிற்கான
ஆணையை ஏற்றுக் கொண்டு அங்கத்துவப் பணத்தினை செலுத்தும் நபர் எவரும் அவையின்
அங்கத்தவர்களாக இணைந்து கொள்ள முடியும.; ஆனால் வாக்களிக்க தகுதியானவர்கள் என்ற
நிபந்தனையை பூர்த்தி செய்தவர்கள் மட்டுமே வாக்களிப்பில் கலந்து கொள்ள முடியும்.
ஆ) அங்கத்துவம் முடிவுக்கு வருதல்:-
1. அங்கத்தவர் ஒருவரின் இறப்பு
2. அங்கத்தவர் ஒருவர் தன்னிச்சையாக விலகிக் கொள்ளல்.
3. அங்கத்துவப் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படல்
(அங்கத்துவ பணம் செலுத்தத் தவறும்போது)
4. அவையினால் நீக்கப்படல்.
அங்கத்தவர் ஒருவர் நோ.ஈ.த.அ வின் நலன்களுக்குக் குந்தகமாக பாரதூரமான முறையில்
செயற்பட்டால் அந்த அங்கத்தவரை நிர்வாகக்குழுவானது அங்கத்துவத்தில் இருந்து நீக்கலாம்.
நிர்வாகக் குழுவின் அறிவித்தல் கிடைத்து ஒரு மாதத்தினுள் அவ்வாறு நீக்கப்பட்ட அங்கத்தவர்
நிர்வாகக் குழுவின் முடிவுக்கு எதிராக நோ.ஈ.த.அ வின் பொது அவைக்கு மேற்முறையீடு செய்யலாம்.
பொது அவையானது விசாரணை ஒன்றின் பின்னர் இறுதி முடிவை எடுக்கும். மேன் முறையீடு
செய்வதற்கான காலத்தின்போதும் விசாரணையை எதிர்கொண்டிருக்கும் காலத்திலும் அங்கத்துவம்
தடை செய்யப்பட்டிருக்கும். இரண்டு அவைகளினதும் பெரும்பான்மை வாக்குகளின் மூலம் அந்த
அங்கத்தவரை நீக்குதல் தொடர்பான முடிவினை பொது அவையானது மேற்கொள்ளும்.
0 6) நிறைவேற்றுக் குழு
அ) அங்கத்தவர்கள் : - நிறைவேற்றுக் குழு 5 நபர்களை கொண்டிருக்கும்: தலைவர், உபதலைவர்,
பொருளாளர், செயலாளர், பேச்சாளர்.
நோர்வே ஈழத்தமிழர் அவைக்கான யாப்பு 7
ஆ) ஆயுட் காலம் : - 2 ஆண்டுகள்
இ) பொறுப்புக்கள் : - நிறைவேற்றுக் குழுவானது நோர்வே ஈழத்தமிழர் அவையின் அங்கீகாரத்துடன்
சிறப்புக் குழுக்களுக்கான குறுகியகால, நடுத்தரக்கால, நீண்டகால வேலைத்திட்டங்களை வரைதல்,
ஒருங்கிணைத்தல், சேர்த்தல் போன்ற பொறுப்புகளை கொண்டுள்ளது. முதலாவது நிறைவேற்றுக்
குழுவானது உப குழுக்களுக்கான விதிமுறைகளை வகுத்துக் கொள்ளும் இவை யாப்பின்
இணைப்புக்களாக இலக்கமிடப்பட்டிருத்தல் வேண்டும்.
ஈ) தொடர்பாடல் அதிகாரி: - தேவை ஏற்படுமிடத்து நிறைவேற்றுக் குழுவானது கடசிசார்பு நபர்களை
தொடர்பாடல் அதிகாரிகளாக நியமனம் செய்து நோர்வேயில் உள்ள பிரதான அரசியல்
கட்சிகளுடனான தொடர்புகளை பேணிக் கொள்ள முடியும்.
0 7) விசேட குழுக்கள் : - நிறைவேற்றுக் குழுவானது தமது தேவைகளின் பிரகாரம் விசேட
குழுக்களை நியமிக்க வேண்டும். அவ்வாறானதொரு குழு 3 அங்கத்தவர்களை கொண்டிருக்கும்,
அந்த குழுவின் பதவிக்காலம் 2 ஆண்டுகளாகும். ஒவ்வொரு குழுக்களுக்குமான தலைவர்
ஒருவரையும், துறைசார்ந்த தகைமையுள்ள நபர்களையும் இரண்டு சபைகளினதும் அங்கீகாரத்துடன்
அல்லது இரண்டு சபைகளும் இணைந்த அவை அங்கத்தவர்களின் 2ஃ3 பெரும்பான்மை ஆதரவுடன்
நியமிக்கலாம்.
0 8) நிதி: -
அ) நோர்வே ஈழத்தமிழர் அவையானது தனது குறிக்கோள்களை விட்டுக் கொடுக்காத வகையில் நிதி
திரட்டும் முயற்சிகளில் ஈடுபடல் வேண்டும். நோ.ஈ.த.அ வின் கட்டமைப்புக்களானது தனது இருப்புக்காக
வெளியக மூலங்களில் தங்கியிருக்க முடியாது.
ஆ) நோ.ஈ.த.அ வின் அங்கத்தவர் அல்லாத தகுதியான பதிவு செய்யப்பட்ட வெளியக
கணக்காய்வாளர் ஒருவர் அவையின் கணக்காய்வாளராக நிறைவேற்றுக் குழுவினால் நியமிக்கப்படல்
வேண்டும்.
0 9) யாப்பு:-
அ) வாக்காளர்கள் தேர்தலில் பங்குபற்றுவதன் மூலம் யாப்பிற்கான தங்களது
அங்கீகாரத்தினை தெரிவிப்பதற்காக நோர்வே ஈழத்தமிழர் அவைக்கான முதலாவது தேர்தல்
நடைபெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவைக்கான யாப்பு மூன்று மொழிகளிலும்(
தமிழ், நோர்வே, ஆங்கிலம்) வெளியிடப்படல் வேண்டும்.
ஆ) ஆரம்ப அவையானது யாப்பினை அங்கீகரித்து உறுதிப்படுத்துதல் வேண்டும்.
இ) யாப்பில் திருத்தங்கள் : - பொதுச் சபையின் வேண்டுகோளுக்கு இணங்க யாப்பில்
திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம். 1) திருத்தங்களானது நோர்வே ஈழத்தமிழர் அவையின்
இரண்டு சபைகளிலும் தனித்தனியாக 2ஃ3 பெரும்பான்மை ஆதரவுடன் பிரேரிக்கப்பட வேண்டும்.
2) திருத்தங்களானது பொதுமக்களின் வாக்குக் கணிப்பிற்கு விடப்படல் வேண்டும், 3)
திருத்தங்களானது ஆகக் குறைந்தது தேர்தல் தொகுதியின் 30 வீதத்துக்குக் குறையாத
எண்ணிக்கையுடையோரால் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என்பதுடன் வாக்களிப்பில்
பங்குபற்றியோரில் 50 வீதத்துக்குக் குறையாதோரின் ஆணையையும் பெற்றிருத்தல் வேண்டும்.
1 0) அவையைக் கலைத்தலும் முரண்பாடு தீர்த்தலும்
அ) நோ.ஈ.த.அ வினை கலைப்பதற்கான எந்தவொரு முன்மொழிவும் அது தொடர்பாக பிரத்தியேகமாக
கூட்டப்பட்ட இரண்டு அவைகளும் ஒன்றிணைந்த ஒரு விசேட கூட்டத்தில் 2ஃ3 பெரும்பான்மை
வாக்கு ஆதரவுடன் முன்வைக்கப்படலாம். இந்தப் பிரேரணையானது நோர்வே ஈழத்தமிழ்
வாக்காளர் தொகுதிகளுக்கு ஆகக் குறைந்தது 3 மாதகால முன்னறிவித்தலுடன்
முன்வைக்கப்பட்டு ஒட்டுமொத்தத் தொகுதியின் 30வீதத்திற்கு குறையாத அளவு
நோர்வே ஈழத்தமிழர் அவைக்கான யாப்பு 8
எண்ணிக்கையுடையோரால் எதிர்ப்பு தெரிவிக்கப்படாதவிடத்து கலைப்பு நிறைவேற்றப்படலாம்.
முன்வைக்கப்பட்ட பிரேரணையினை 30 வீதத்திற்கு மேற்பட்ட தொகுதிவாக்காளர்கள்
எதிர்க்கநேர்ந்தால் புதிய தேர்தல் ஒன்று குறித்த எதிர்ப்பு பதிவு செய்யப்பட்ட தினத்தில்
இருந்து 6 மாதத்தினுள் நடாத்தப்படல் வேண்டும். அவையைக் கலைப்பதற்கான பிரேரணை
ஒன்று எதிர்க்கப்படாதவிடத்து நிறைவேற்றுக் குழுவானது ஒரு நபரைஃநபர்களை
முடிவுறுத்துனராக நியமித்து அவர்களின் மேற்பார்வையில் நோ.ஈ.த.அ வின் சொத்துக்கள்
பொறுப்புக்களைத் தீர்த்து கலைப்பை முடிவுக்கு கொண்டுவரல் வேண்டும்.
ஆ) இந்த யாப்பிலுள்ள வாசகங்கள் தொடர்பிலான வியாக்கியானங்கள் தொடர்பான எந்தவொரு
முரண்பாடும் நோர்வே நீதிமன்றின் மூலம் தீர்க்கப்படல் வேண்டும். இதற்கான ஏற்றுக்
கொள்ளப்பட்ட இடமாக ஒஸ்லோ மாவட்ட நீதிமன்றம் அமையும்.
1 1. திகதி : - 29 ஒக்டோபர் 2009