08 .06 .2011 நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் இலங்கைப் போர்க்குற்றம் புரிந்ததைக் கண்டித்தும் அவர்களுக்கு எதிரான பொருளாதார தடையை இந்தியா கொண்டு வரவேண்டியும் தீர்மனாம் நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானத்தை முன்மொழிந்து அதனை வெற்றித் தீர்மானமாக மாற்றிய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலித்தா அவர்களுக்கு நோர்வே ஈழத்தமிழர் அவை நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

மேலும், இத்தீர்மானம் கொண்டு வரப்பட்டபொழுது அதனை ஆதரித்து பேசிய அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். எமது தொப்புள்க்கொடி உறவுகளின் தொடர்ச்சியான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது. எமது தமிழக உறவுகளுக்கும் எமது பாசத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

முதல்வர் உட்பட முன்னணி கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் உரிய முறையில் எமது நன்றிக் கடிதம் விரைவில் அனுப்பு வைக்கப்படும் என்பதனை நோர்வே வாழ் தமிழ் மக்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Bilde: