போர் முடிந்தும் இரண்டு வருடங்கள் என்கின்ற தலைப்பில் ஐரோப்பிய பாராளமன்றத்தில் GUE/ NGL European united lift – Nordic green left europen parliament group என்ற அமைப்பினரால், அனைத்துலக மக்கள் பேரவையினராலும் ஒன்றுகூடல் ஐரோப்பிய பாராளமன்றத்திற்குள் யூன் 1ம் திகதி புதன்கிழமை பி.பகல் 14.00 முதல் 18.30 மணிவரை இடம்பெற்றிருந்தது.

தாயகத்திலிருந்து முன்னைநாள் பாராளமன்ற உறுப்பினர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னனி உறுப்பினர்கள் திரு.செல்வராசா கஐந்திரன், திரு.சின்னத்துரை வரதராஐன், திரு.விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோரும், தமிழ்நாட்டில் இருந்து மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வை.கோ அவர்களும் விசேடமாக வந்து கலந்து கொண்டிருந்தனர்.

இவர்களுடன் உலகின் அனைத்து நாடுகளிலும் இருக்கும் தமிழ் மக்கள் பேரவையினர், ஏனைய தமிழர் அமைப்புக்கள் என 20 அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் 200 பேர் வரையில் கலந்து கொண்டிருந்தனர்.

http://www.pathivu.com/news/16686/57//d,article_full.aspx

Bilde: